ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மக்கள் குறை தீர் மனுவைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சாலை விபத்து நிவாரணமாக 11 பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்திற்கான காசோலையையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 5 பயனாளிகளுக்கு 3,09,775 ரூபாய் மதிப்பிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட 13.67 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்வின்போது, வருவாய் அலுவலர் சிவகாமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவசங்கரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து படகில் வந்த அகதி கைது!