ETV Bharat / state

ரயில்பாதையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிப்பு - பொதுமக்கள் அவதி! - Rain water stagnation at Ramanathapuram railway tunnel

ரமநாதபுரம்: லாந்தை ரயில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் ஆறு கிராமங்களில் மின்சாரம், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

lanthai railway tunnel
author img

By

Published : Oct 23, 2019, 1:21 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ளது லாந்தை கிராமம். இப்பகுதியில் ரயில்வே துறையின் சார்பாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. சுமார் நான்கு ஆள் மட்டத்திற்கு மழைநீர் தேங்கியதால் நெடுஞ்சாலையுடனான லாந்தை வழியாகச் செல்லும் சின்னத் தாமரைகுடி, பெரியத்தாமரைகுடி உள்ளிட்ட ஆறு கிராமத்திற்கு போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதன் காரணமாக ரயில் பாதையில் மட்டுமே லாந்தை கிராமத்தை கடந்து செல்ல முடிகிறது. இப்பகுதியை இருசக்கர வாகனத்தில் கூட கடக்க முடியவில்லை. இதனால் அத்தியாவசியப் பொருட்களான பால், சமையல் எரிவாயு, உணவு உள்ளிட்டவைகளை வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாமல் கிராம மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவலறிந்து லாந்தை கிராமத்தை ஆய்வு செய்ய வந்த ரயில்வே, மாவட்ட அலுவலர்களுடன் கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஆண்டும் இதேபோல் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கியது. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து மின் மோட்டார் உதவியுடன் மழை நீரை வெளியேற்றி ரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்து கொடுத்தார்.

ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி உள்ளது

ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்கிய உடனே ரயில்வே சுரங்கப்பாதை நிரம்பி உள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொலை செய்யப்பட்ட ரவுடி சுரேஷின் தலை கண்டெடுப்பு

Intro:ராமநாதபுரம் அருகே உள்ள லாந்தை ரயில் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் 7 கிராமங்களில் மின்சாரம், பேருந்து வசதி தடைபட்டு உள்ளதால் கிராம மக்கள் தவிப்பு.

Body:இராமநாதபுரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ளது லாந்தை கிராமம் இங்கு ரயில்வே துறையின் சார்பாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் நேற்று பெய்த கன மழை நீர் தேங்கியது. சுமார் நான்கு ஆள் மட்டத்துக்கு மழை நீர் தேங்கியதால் நெடுஞ்சாலையுடனான லாந்தை வழியாகச் செல்லும் சின்னத் தாமரைகுடி,பெரியத்தாமரைகுடி உள்ளிட்ட 6 கிராமத்திற்கு தொடர்பு
துண்டிக்கப்பட்டது.
இதனால் ரயில் பாதையில் கடந்து மட்டுமே செல்ல முடிகிறது. இருசக்கர வாகனத்தில் கூட கடக்க முடியவில்லை மேலும் அத்தியாவசியப் பொருட்களான பால், கேஸ், உணவு போன்றவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். லாந்தை கிராமத்தை ஆய்வு செய்ய வந்த ரயில்வே மற்றும் மாவட்ட அதிகாரிகள் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டும் இதே போல் வடகிழக்கு பருவமழையின் போது மழைநீர் தேங்கியது. அப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து. ஒரு மின் மோட்டார் உதவியுடன் மழை நீரை வெளியேற்றி இரயில்வே சுரங்கப்பாதையை சரி செய்து கொடுத்தார். இந்த ஆண்டு பருவ மழை துவங்கி உடனே இரயில்வே சுரங்கப்பாதை நிரம்பி உள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு மாவட்ட நிர்வாகமும், ரயில்வேத்துறை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை என்றும் கூறுகின்றனர்.

பேட்டி
ராமராஜன், கோபாலகிருஷ்ணன்

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.