ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்திற்கு செல்வதற்காக ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது.
இந்த சுரங்க பாதையை ஆக்கிடாவலசை, தோப்பு வலசை, மணிகூண்டு, தாமரைக்குளம் உள்ளிட்ட மீனவக் கிராம மக்கள் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு பெய்த மழை நீர், தற்போது வரை ரயில்வே சுரங்கப் பாதையில் குளம் போல் தேங்கி நிற்பதால் சுரங்கப்பாதை வழியாக மீனவ மக்கள் செல்லமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
மக்கள் கோரிக்கை
இதனால் ஆக்கிடாவலசை, தோப்பு வலசை, மணிக்குண்டு, தாமரை குளம் உள்ளிட்ட கிராம மக்கள் ஐந்து கிலோமீட்டர் சுற்றி சென்று ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வேண்டியுள்ளதாக மீனவமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாக அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து 10 மாதங்களாக ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள் மாற்றம் - அரசாணை வெளியீடு