ராமநாதபுரம் மாவட்டத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் புதிய பாலம் ரூ. 240 கோடி செலவில் 2.5 கிலோ மீட்டர் கடல் மீது அமைக்கப்படவிருக்கிறது. அதன் முதற்கட்ட பணிகளாக மண் பரிசோதனை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது.
இந்தச்சூழலில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த ரயில்வே வாரியத் தலைவர் வினோத்குமார் யாதவ் பாம்பன் பாலத்தை ஆய்வு செய்தார்.
அந்த ஆய்வின் போது தென்னக ரயில்வேயின் முதன்மை மேலாளர் ஜான் தாமஸ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர். பாலத்திற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதன்மை ரயில்வே வாரியத் தலைவரின் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - மீன்வளத் துறை எச்சரிக்கை