ETV Bharat / state

கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசை: கூடுதல் தகனமேடை ஏற்படுத்த கோரிக்கை! - கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்

ராமநாதபுரம்: கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட நீண்ட வரிசையில் வைத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் மின்தகனமேடை ஏற்படுத்த கோரிக்கை
கூடுதல் மின்தகனமேடை ஏற்படுத்த கோரிக்கை
author img

By

Published : May 31, 2021, 11:18 AM IST

ராமநாதபுத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் அதிகளவில் ராமநாதபுரம் அருகே உள்ள அல்லிக்கண்மாய் மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த மின்மயானத்தில், காலை முதல் இரவு வரை இறந்தவர்களின் உடல்களுக்கு தொடர்ந்து இறுதிசடங்கு செய்யப்பட்டு வருகிறன. சடலங்களை எரியூட்டும் போது, சில நேரங்களில் இயந்திரக் கோளாறு போன்றவற்றால் தாமதம் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரியூட்ட வரிசை

கரோனா தொற்று நோயாளிகள் சடலங்களை அதிகளவில் எரியூட்டுவதால், இயற்கையாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலை, தேவையைக் கருத்தில் கொண்டு, அல்லிக்கண்மாய் மயானத்தில், சடலங்களை தகனம் செய்வதற்கு கூடுதல் ஏற்பாடு செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.