ETV Bharat / state

பள்ளி வாட்ஸ்-அப் குழுவில் ஆபாச வீடியோ: பெற்றோர்கள் அதிர்ச்சி!

author img

By

Published : Jun 19, 2021, 10:47 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வாட்ஸ் அப் குழுவில் ஆபாச வீடியோ வந்ததால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

pornographic-content-uploaded-in-school-whatsup-group-in-kamuthi
பள்ளி வாட்ஸ்-அப் தளத்தில் ஆபாச வீடியோ: பெற்றோர்கள் அதிர்ச்சி

ராமநாதபுரம்: கமுதி நாடார் பஜாரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடப்பு 2021-22 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. எல்.கே.ஜி., முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வகுப்பு வாரியாக மாணவர்களின் தொடர்பு எண்களைக் கொண்டு வாட்ஸ்-அப் குழுக்கள் வகுப்பாசிரியர்களை அட்மினாக கொண்டு செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மூன்றாம் வகுப்பு அ பிரிவுக்கு எனத் தனியாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், இன்று(ஜூன் 19) திடீரென ஒரு எண்ணில் இருந்து ஆபாச வீடியோ வந்தது. இதனைக் கண்ட அந்த குழுவில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பள்ளியின் செயலாளர் முத்து விஜயன் அளித்த புகாரின் பேரில் கமுதி காவல்துறையினர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து வந்த ஆபாச வீடியோ குறித்து விசாரித்து வருகின்றனர். பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில் வந்த ஆபாச வீடியோ பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.