ETV Bharat / state

இணைய வழி மோசடி - ரூ.1 லட்சத்தை இழந்த சார்பு ஆய்வாளர் - இணைய வழி மோசடி

ராமநாதபுரம்: இணைய வழி மோசடி மூலம் ராமநாதபுரம் சார்பு ஆய்வாளர் ஒரு லட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ATM cheating
author img

By

Published : Nov 19, 2019, 11:52 AM IST

ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிவருகிறார். கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் இவரது தொலைபேசிக்கு அக்டோபர் 9ஆம் தேதியன்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், 'உங்கள் ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு எண்ணை தெரிவிக்கவும்' என்று வங்கிப் பணியாளர் போல் பேசியுள்ளார்.

இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தி சேமிப்பு கணக்கு எண்ணை அந்த நபரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெவ்வேறு தேதிகளில் கிருஷ்ணமூர்த்தியின் கணக்கிலிருந்து ரூ.39,980, ரூ.9,990 (இரு முறை), ரூ.39,950 வீதம் என நான்கு தவணைகளில் ரூ.99,968 வரை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற கிருஷ்ணமூர்த்தி சேமிப்பு கணக்கில் பணம் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:

பிளாஸ்டிக் முதல் பனை வரை - அசத்தும் ராமநாதபுரப் பெண்கள்!

Intro:இராமநாதபுரம்
நவ.18

இணைய வழி மோசடி 1 லட்சத்தை இழந்த இராமநாதபுரம் சார்பு ஆய்வாளர்.
Body:இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி, இராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இராமநாதபுரம்
இவருக்கு கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 09.10.19 அன்று, கிருஷ்ணமூர்த்தியின் தொலைபேசிக்கு
உங்கள் ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும். சேமிப்பு கணக்கு எண்ணை தெரிவிக்குமாறு
வங்கி பணியாளர் போல் ஒருவர் பேசியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்த்தி சேமிப்பு கணக்கில் எண்ணை அந்த நபரிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வெவ்வேறு தேதிகளில் கிருஷ்ணமூர்த்தியின் கணக்கிலிருந்து
ரூ.39,980 ரூ.9,990 (இரு முறை), ரூ.39,950 வீதம் என
4 தவணைகளில் ரூ.99,968 வரை எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஏடிஎம்- இல் பணம் எடுக்கச் சென்ற கிருஷ்ணமூர்த்தி சேமிப்பு கணக்கில் பணம் குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.