ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பாம்பன் வடக்கு - தெற்கு கடல் பகுதியில் அரக்கு நிறச் சட்டை ஊதா நிற டவுசர் அணிந்திருக்கும் அடையாளம் தெரியாத ஆணின் இடுப்பில் கயிறு கட்டியபடி மிதப்பதாக மீனவர்கள் மரைன் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஆணின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து இறந்தவர் யார் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இறந்தவர் இடுப்பில் கயிறு கட்டியிருந்ததால் யாரேனும் அவரைக் கொலைசெய்து கடலில் வீசி எறிந்தனரா அல்லது பாம்பன் பாலத்திலிருந்து இடுப்பில் கல்லை கட்டிக்கொண்டு குதித்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பாம்பன் பாலத்தில் தொடர் பராமரிப்புப்பணி - செப்.19 வரை ரயில்கள் இயக்கத்தடை