ETV Bharat / state

கரோனா சிகிச்சைக்கு 80 கி.மீ செல்லும் நோயாளிகள்! - கரோனா பரவல் விவரம்

ராமநாதபுரம்: கரோனா சிகிச்சைக்கு 80 கி.மீ செல்லும் நிலை இருப்பதால் கமுதி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை வசதியை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா சிகிச்சைக்கு 80 கி.மீ செல்லும் நோயாளிகள்

author img

By

Published : May 18, 2021, 7:29 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் அறுவைச சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, இசிஜி, பெண்கள் குடும்ப நல அறுவைச் சிகிச்சை, எலும்பு முறிவு, பல் மருத்துவம், சித்த மருத்துவப் பிரிவு, ரத்த வங்கி, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு 37 வகை மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கும் வகையில் சிறப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள், 64 படுக்கை வசதிகள் உள்ளன.

மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் என 48 பேர் பணியில் உள்ளனர். இங்கு நாள்தோறும் கமுதியைச் சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற வருகின்றனர். கரோனா பரவல் முதல் அலையின்போது, இங்கு அது தொடர்பான பரிசோதனையோ, சிகிச்சையோ மேற்கொள்ளப்படவில்லை. பேரையூர் தலைமை ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 5 சுகாதார நிலையங்களில் மட்டும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதால், கமுதி அரசு மருத்துவமனையில் அதற்கான பரிசோதனைகள் கடந்த ஏப். 29ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், தொற்று உறுதியான நோயாளிகள் 80 கி.மீ. தொலைவிலுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கமுதி அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் நோயாளிகள் அதிக தொலைவிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதால் நோயாளிகளும், அவர்களது உறவினா்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொற்று அறிகுறி இருந்தாலும் அது குறித்து வெளியே தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கிவிடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பொதுமக்கள் நலன் கருதி கமுதி அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து

கமுதி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் இதுகுறித்து, ‘கமுதி அரசு மருத்துவமனையில் விரைவில் முதல்கட்டமாக 15 ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள், 230 மெ.டன் ஆக்ஸிஜன் சேமிப்பு சிலிண்டர் வசதிகள் ஏற்படுத்தி, கரோனா சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: தண்ணீர் இல்லாத கழிப்பறைகள் - கரோனா நோயாளிகள் வேதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.