கச்சத்தீவில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு 74 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகள் என மொத்தம் 98 படகுகளில் 2,881 பேர் செல்கின்றனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டு, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு படகுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நவராஜ் என்ற பயணி கூறுகையில், 'பல ஆண்டுகளாகக் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி வந்தேன். அதற்கான வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது. கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்குச் செல்வதற்கும் அங்கு வரும் இலங்கை மக்களைச் சந்திப்பதற்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராஜீவ் ஃபர்ணன்டஸ் கூறுகையில், 'தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்றுவருகிறேன். கச்சத்தீவு ஏற்பாடுகள் சுலபமாகி வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து இலங்கை அருகே உள்ள கச்சத்தீவுக்குச் சென்று திருவிழாவில் பங்கேற்பது மிகுந்த மன மகிழ்ச்சி தருகிறது. இலங்கையில் உள்ள உறவுகளை சந்திப்பதற்கான வாய்ப்பையும் இந்தத் திருவிழா ஏற்படுத்தி தருகிறது. இதன் மூலம் இருநாட்டு மீனவர்களின் பிரச்னை சுமூகமாக முடிய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற திருவிழா தொடர்ந்து நடைபெற வேண்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க... காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: இறப்பில் ஒன்று சேர்ந்த காதலர்கள்