ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கவிதா என்பவர் பனை கள்ளு மீதான தடையை நீக்கி கள்ளு இறக்க அனுமதிக்கக் கோரி மனு அளித்துள்ளார்.
அதில் ”இந்தியா முழுவதும் தமிழ்நாட்டைத் தவிர அனைத்து மாநிலத்திலும் கள்ளு இறக்க அனுமதி உள்ளது. இயற்கையான கள்ளு மீதான தடையை நீக்கி பனை விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட விபத்து காப்பீட்டு தொகை, மானியம், உபகரணங்கள், பனை ஓலை பயிற்சி மூலம் பொருளாதார முன்னேற்றம் பெற ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அழிந்து வரும் பனை மரங்களை காத்து பனை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசின் தரிசு நிலங்கள், நீர் வரத்து பகுதியின் கரைகள், குளங்கள், தமிழ்நாடு வனப்பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி பனை விவசாயிகளை பயன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: மாயாற்றின் குறுக்கே பொதுமக்களின் பங்களிப்போடு அமைக்கப்பட்ட தற்காலிக பாலம்!