இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் இச்சூழலில் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடியுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள சிக்கல் ஊராட்சியில் பணிபுரியும் 21 தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் நோக்கில், சிக்கல் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் சக்கரை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு அவர்களுக்கு சேலை, வேட்டி, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பையை வழங்கினர்.
மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை பின்பற்றும் விதமாக தூய்மைப் பணியாளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய ஆட்சியர்!