ராமநாதபுரம்: அமாவாசை தினங்களில் தங்களோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என ஒரு ஐதீகம் உள்ளது.
இதனால், இன்று (செப்.06) அமாவாசை தினம் என்பதனால் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் கரோனா விதிமுறைகளை மீறி அக்னி தீர்த்த கடற்கரையில் ஒரே இடத்தில் குவிந்தனர்.
கடற்கரையில் குவிந்த மக்கள்
அங்கு, அக்னி தீர்த்த கடற்கரைக்கு செல்வதற்கு காவல் துறையினர் அனுமதிக்கப்படாததால் அதன் அருகில் உள்ள ஒலைகுடா செல்லும் சாலையில் இருக்கும் கடற்கரையில் பொதுமக்கள் நீராடி வருகின்றனர்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒற்றை இலக்க எண்களில் கரோனா தொற்றின் பாதிப்பு வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று (செப்.06) தகுந்த இடைவெளி, முகக்கவசம் இன்றி ஏராளமானோர் குவிந்துள்ளதால் தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
பக்தர்கள் வழிபாடு
தொடர்ந்து, ராமநாதசாமி திருக்கோயில் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்கு முன்பாக சாலையில் நின்று வழிபட்டு செல்கின்றனர்.
இதையும் படிங்க: 1,000 கோடி ரூபாய் கோயில் சொத்துக்கள் மீட்கப்படும் - அமைச்சர் சேகர் பாபு