ETV Bharat / state

80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு கோரலாம்! - வயதானவர்கள் வாக்காளர்கள் விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு கோரலாம்

ராமநாதபுரம்: 80 வயதுக்கு மேற்பட்ட 19 ஆயிரத்து 300 முதியவா்களும் மூதாட்டிகளும் விரும்பினால் தபால் வாக்கு கோரலாம் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

80 yrs old senior citizens can apply postal votes
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
author img

By

Published : Mar 10, 2021, 11:48 AM IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (மார்ச்.09) வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்றார். இந்நிகழ்வில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்று ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, ஆட்சியர் ஆலிவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"ராமநாதபுரத்திலிருக்கும் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 343 ஆண் வாக்காளர்கள், ஐந்து லட்சத்து 81 ஆயிரத்து 132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 21 ஆயிரத்து 34 பேர் உள்ளனர். இத்தகைய மூத்த குடிமக்களின் நலனுக்காக, அவர்களது விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது மாவட்டத்தில் ஆயிரத்து 369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்து 50 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற வீதம், மாவட்டத்தில் கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள் முறையே மொத்தம் 1,647 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 80 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் முறையான ஆவணமின்றி இதுவரை 36 லட்சத்து 48 ஆயிரத்து 420 ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 11 புகார்கள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் '1950' என்ற தேர்தல் தகவல் தொடர்பு எண்ணிற்கு 651 அழைப்புகள் வரப்பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.