ETV Bharat / state

‘பரமக்குடியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும்’ - திமுக வேட்பாளர் வாக்குறுதி - இராமநாதபுரம்

ராமநாதபுரம்: பரமக்குடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர் சம்பத்குமார், நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பரமக்குடி தொகுதி
author img

By

Published : Mar 31, 2019, 9:27 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை சுடுபிடித்துள்ளது. திமுக சார்பாக சம்பத்குமார், அதிமுக சார்பாக சதன் பிரபாகரன், அமமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பரமக்குடி தொகுதி

இந்நிலையில், பரபரப்பான தேர்தல் பரப்புரைக்கு இடையே திமுக வேட்பாளர் சம்பத்குமார் நமது ஈடிவி பார்த்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அதில், பரமக்குடி மக்களின் பிரதான பிரச்னையான பாதாள சாக்கடை திட்டம் சரி செய்து வைகை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுப்பதே முதன்மையானது, அதேபோல் கொசு ஒழிப்பு, போக்குவரத்து நெரிசல் சரி செய்வது தேர்தல் அறிக்கையிலேயே அளித்துள்ளோம் என்றார்.

அதேபோல், “பரமக்குடியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைப்புக்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எங்களைப் பொறுத்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா மட்டுமல்ல களத்தில் உள்ள எல்லோரும் போட்டியாளர்கள்தான். இத்தேர்தலில் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” எனத் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
மார்ச்.30
பரமக்குடி தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்படும் திமுக வேட்பாளர் சம்பத்குமார்.

Body:இராமநாதபுரம் பரமக்குடி தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது.

திமுக சார்பாக சம்பத்குமார், அதிமுக சார்பில் சதன் பிரபாகரன், அமமுக சார்பாக முன்னாள் சட்டமன்ற வேட்பாளர் முத்தையா போட்டியிடுகின்றார்.

இதனால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஈடிவி பார்த்திற்காக பிரத்தியேக பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்தது. பரமக்குடியின் பிரதான பிரச்சனையான பாதாள சாக்கடை திட்டம் சரி செய்து வைகை ஆற்றில் கலக்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுப்பதே முதன்மையானது, அதேபோல் கொசு ஒழிப்பு, போக்குவரத்து நெரிசல் சரி செய்வது தேர்தல் அறிக்கையிலேயே அளித்துள்ளோம் என்றார்.

பரமக்குடியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்ட என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு ஜி எஸ் டி வரி குறைப்புக்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படும்.

எங்களை பொறுத்தவரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தையா மட்டுமல்ல களத்தில் உள்ள எல்லோரும் போட்டியாளர்கள்தான்.

மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை இருப்பதால் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றார். பரமக்குடி இடைத்தேர்தலில் குறைந்தபட்ச 25 ஆயிரம் வாக்காளர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.