ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சாமிதுரை தரப்பினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது தரப்பினருக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
சண்டையில் நேர்ந்த சம்பவங்கள்
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்தச் சண்டையில் ஐந்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிவாள் வெட்டும் விழுந்தது. இதுதொடர்பாக நயினார்கோவில் காவல் துறையினர் இரு தரப்பைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
இந்நிலையில் சாமிதுரையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரைத்தார். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சாமிதுரையை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை.13) சாமிதுரையை காவல் துறையினர் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'சிறுமியை மிரட்டி திருமணம் - தாய்மாமன் கைது'