ETV Bharat / state

உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு: பேச்சுவார்த்தை தோல்வி - ராமநாதபுரம் மாவட்டச் செய்திகள்

உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு உழவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு

author img

By

Published : Sep 21, 2021, 10:32 AM IST

Updated : Sep 21, 2021, 10:50 AM IST

ராமநாதபுரம் அருகே உப்பூர் அனல்மின் நிலையத்தில் 800 மெகாவாட் உற்பத்தித் திறனுடைய இரு அனல்மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகின்றது. இதனால் அப்பகுதியில் உள்ள உழவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து, விசாரணையில் உப்பூர் அனல்மின் நிலைய பணிகளை நிறுத்திவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து மீண்டும் பணிகள் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் உப்பூர் அனல் மின் நிலையம் அமைத்து விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில், நிலத்திற்குரிய பணத்தைப் பெற்றுக்கொண்டு உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு ஒப்படைக்கும்படி உழவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி உழவர்கள் யாரும் நிலத்தை ஒப்படைக்க முன்வராத காரணத்தினால் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் உப்பூர் பகுதியில் உள்ள உழவர்கள், மீனவர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அந்தப் பேச்சுவார்த்தையில் உழவர்கள், மீனவர்களுக்கு உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தையிலிருந்து உழவர்கள் வெளியேறினர்.

இதனால் உப்பூர் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும் இது சம்பந்தமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அப்பகுதியில் உள்ள உழவர்கள், மீனவர்கள் சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: டாஸ்மாக் சுவருதான் வீக்கு... ஆனா லாக்கரு ஸ்ட்ராங்கு!

Last Updated : Sep 21, 2021, 10:50 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.