ETV Bharat / state

18 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்

author img

By

Published : Aug 24, 2021, 11:03 PM IST

ராமநாதபுரத்தில் 18 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் இன்று (ஆக. 24) ஆர்வமுடன் பார்வையிட்டுச் சென்றனர்.

18 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட அப்துல் கலாம் தேசிய நினைவகம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அப்துல் கலாம் தேசிய நினைவகம், கரோனா பொதுமுடக்க காலத்தில் இருந்து கடந்த 18 மாதத்திற்குமேல் திறக்கப்படாமல் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு நோய்ப்பரவல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கரோனா ஊரடங்குத்தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காரணத்தால் இன்றுமுதல் (ஆக. 24) பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.

கலாம் நினைவிடத்தில் பிரார்த்தனை

இதனால், பல்வேறு வெளி மாவட்டம், மாநிலத்திலிருந்துவந்த சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் அப்துல் கலாம் தேசிய நினைவிடத்தை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

மேலும் அவர்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியைக் கொண்டு கையை சுத்தம் செய்தல் போன்ற கரோனா வழிகாட்டு நிபந்தனைகளைப் பின்பற்றியபின்னரே, நினைவிடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

முன்னதாக அப்துல் கலாமின் உறவினர்கள், அப்துல் கலாம் நினைவிடத்திற்கு வந்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு, வந்திருந்த சுற்றுலாப்பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

இதையும் படிங்க: 'சிங்கார சென்னை 2.0 : பணிகள் குறித்து அரசு விளக்கம்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.