கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் ஜனவரி எட்டாம் தேதி சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இரண்டு நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் முன்னதாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவல் துறையினர் கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் வில்சன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த சேக் தாவூத் என்ற நபர் ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை உடற்பயிற்சி கூடத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு வரும் 14ஆம் தேதிவரை சிறைக் காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.