ராமநாதபுரம் பட்டினம்காத்தான் ஓம்சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதனையடுத்து அவர் இன்று(மே.04) வீடு திரும்பியபோது, பின்பக்கக் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 24 பவுன் தங்க நகைகள் 1.10 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, திருடர்களைத் தேடி வருகின்றனர்.