ETV Bharat / state

தனுஷ்கோடி கடல் பகுதியில் 8400 சித்தாமை முட்டைகள் சேகரிப்பு!

author img

By

Published : Mar 3, 2021, 10:39 AM IST

ராமநாதபுரம்: தனுஷ்கோடி கடல் பகுதியில் 70 கூடுகளில் இருந்து 8400 சித்தாமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சித்தாமை முட்டைகள் சேகரிப்பு
சித்தாமை முட்டைகள் சேகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல்வேறு வகையான அரிய உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் கடலை தூய்மைப்படுத்தும் கடல் காவலனான சித்தாமைகள் முதன்மையானது. இவை தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையிலான கடற்கரைப் பகுதிகளில் நவம்பர் மாதத்திலிருந்து முட்டையிட தொடங்கும். அதிகாலையில் கரையில் ஒதுங்கும் இந்த ஆமைகள், கடற்கரையில் முட்டையிட்டு மீண்டும் கடலுக்கு செல்லும்.

அந்த முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைப்பர். அங்கு முட்டை பொரிந்து பின்பு சித்தாமைக் குஞ்சுகள் கடலில் விடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான முதல் சேகரிப்பு கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கியது. தற்போது வரை 8400 சித்தா முட்டைகள் 70 கூடுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சித்தாமை முட்டைகள் சேகரிப்பு

நேற்று முன்தினம் அரிச்சல்முனை தனுஷ்கோடி பகுதியில் இருந்து 4 கூட்டிலிருந்து 450 ஆமை முட்டைகளை கைப்பற்றியதாக மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன் தெரிவித்தார். அப்போது, அந்த முட்டைகளை பாதுகாப்பாக முட்டை பொரிப்பு கத்தில் வைத்து, பாதுகாத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: கடலில் தத்தளித்த மீனவர்: பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.