ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த பி.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சந்தியா. இந்நிலையில், கார்த்திக் மனைவி சந்தியாவை சந்திக்க கோகொண்டான் கிராமத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது, கார்திக்கும்,மனைவி சந்தியாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சந்தியாவை சராமரியாகத் தாக்கியுள்ளார். இதைக்கண்ட சந்தியாவின் பாட்டி காளியம்மாள் (70) சண்டையை விலக்குவதற்காகவும் சமாதானம் செய்யவும் சென்றுள்ளார். இதனால், ஆத்திமடைந்த கார்த்திக் அருகிலிருந்த கட்டையை எடுத்து மூதாட்டி காளியாம்மாவின் தலையில் தாக்கியுள்ளார்.
அதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பதுங்கி இருந்த கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணம் மீறிய உறவு: கணவரைத் தீர்த்து கட்டிய மனைவி