ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் மார்க்கமாக புகையிலை பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக மண்டபம் சுங்கத்துறை இலாகாவுக்கு பிப்.14ஆம் தேதி தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் மண்டபம் சுங்கத்துறை அலுவலர்கள் வேதாளை, மரைக்காயர்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நேற்றிரவு (பிப்.15) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குறவன்தோப்பு என்னுமிடத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டை பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மூக்குப்பொடி பாக்கெட் 40 கிலோ இருந்தது. அதனை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.
இதையும் படிங்க: தபால் வாக்காளர்கள் பட்டியல் வேண்டும் - கே.என். நேரு மனு!