ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1800க்கும் மேலான விசைப்படகுகள் உள்ளன.
மாவட்டத்தில் விசைப்படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் இரட்டைமடி சுருக்குமடி வலைகளை கண்காணிக்கவும், அதனை தடுக்கவும், தமிழ்நாடு கடலோர சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும்,
கஜா புயலால் மறுசீரமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மீன்வளத்துறைக்கு ரோந்துப் படகு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடலோர காவல் படையினர் ராமநாதபுரம் முழுவதும் உள்ள கடலோரப் பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியை மேற்கொள்ள முடியும். இதனால் கடல் பகுதியில் நடைபெறும் குற்றங்கள் குறையும் என மீன்வளத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.