ETV Bharat / state

பாம்பன் புதிய பாலம் பணிகள் எப்போது நிறைவடையும்? - அமைச்சர் பதில் - புதிய பாம்பன் பாலம்

கடல் மத்தியில் கட்டப்படும் பாம்பன் புதிய பாலத்தின் பணிகள் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்
author img

By

Published : Oct 9, 2021, 9:58 AM IST

பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டதாலும், பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்படுவதாலும், பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுவதாக ரயில்வே அமைச்சகம் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் அறிவித்தது.

புதிய பாம்பன் பாலத்திற்கான திட்டச் செலவு ரூ.279.9 கோடி. பாலத்தின் நீளம் 2078 மீட்டர். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து ஆறு மீட்டர் உயரத்தில் புதிய பாலம் எழுப்பப்பட உள்ளது. இந்தத் தூண்கள் இடையே 60 அடி நீளம் கொண்ட 101 இணைப்பு கர்டர்கள் பொருத்தப்பட உள்ளன.

2020இல் தடைபட்ட பணிகள்

பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக்கூடிய செங்குத்து தூக்கு பாலமும் அமைய உள்ளது. ரயில்வே நிர்வாகம் செப்டம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய ரயில்வே பாலத்தின் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்தது.

ஆனால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா பரவல் காரணமாக பாம்பன் புதிய பாலப் பணிகள் சில மாதங்கள் தடைபட்டன. தொடர்ந்து 2020 நவம்பர் மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை, பாம்பன் வடக்கு கடற்பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக புதிய பாலத்திற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவந்த மிதவைகள், மிதவைகளிலிருந்த கிரேன்கள் காற்றின் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்தன.

அவை தற்போது உள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்தன. இதனால் பணிகள் சில நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட செப்டம்பர் 2021-க்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.

அடுத்தாண்டு நிறைவுபெறும்

இந்நிலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தனது ட்விட்டர் பக்கத்தில், பாம்பன் கடலில் கட்டப்படும் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தின் பணிகள் மார்ச் 2022-க்குள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜனநாயக உரிமை மறுப்பா? - தேர்தல் பணிக்குச் சென்றோர் பரிதவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.