நீட் தேர்வு கலந்தாய்வின்போது போலிச் சான்றிதழ் கொடுத்ததாக ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பல் மருத்துவர் பாலச்சந்தர் மற்றும் அவரது மகள் மீது சென்னை பெரியமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு அவர்கள் ஆஜராகாத நிலையில், மூன்றாவது முறையாக, பரமக்குடியில் உள்ள அவரது வீட்டில் தற்போது சம்மன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரையும் கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ஒரு தனிப்படையினர் மட்டும் பரமக்குடி பகுதியில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றால் போராடுவோம் - கிசான் சேனா எச்சரிக்கை!