தேசிய பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் சார்பில், தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பரமக்குடி ஐந்து முனை அருகே நடைபெற்றது.
அதில், சமையல் செய்யும் சிலிண்டரில் தீ ஏற்பட்டால் பாதுகாப்பாக அணைப்பது, பள்ளியில் வகுப்பறை கதவுகள் மற்றும் அவசர வழிகளை திறந்து வைப்பது, வணிக வளாகங்களில் தீ பாதுகாப்புக் கருவிகளை பொருத்துவது, நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது, முதல் உதவி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனர்.
இதை மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி நேரில் பார்வையிட்டனர்.
இதையும் படிக்க: ஜப்பானில் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் இந்தியா கடற்படை!