ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம்: மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ராமநாதபுரம்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம்

author img

By

Published : Mar 29, 2021, 4:41 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று (மார்ச் 29) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தேர்தல் பொது பார்வையாளர் விசோப் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவிற்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறன் கொண்ட வாக்காளர்களின் வசதிக்காக சாய்வு தளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக ஒதுக்கீடு செய்வதற்கான இரண்டு கட்ட கணினி முறை ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஒ ரு மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரத்தில் 15 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 16 பட்டன்களில் மட்டுமே வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பதிவு செய்ய இயலும்.

இந்நிலையில் பரமக்குடி தொகுதியில் 15, ராமநாதபுரம் தொகுதியில் 19, திருவாடானை தொகுதியில் 15, முதுகுளத்தூர் தொகுதியில் 23 என்ற வீதத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அந்தவகையில் முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா இரண்டு வாக்கு செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகம், முதுகுளத்தூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட சேமிப்பு கிடங்கு ஆகிய இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொறிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.