ராமநாதபுரம் மாவட்டத்தில், மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டி சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 57 அணிகள் கலந்து கொண்டன. இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு எம்.பி. நவாஸ்கனி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சசிகலாவின் வருகை அதிமுகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும் அவரின் வருகை திமுகவிற்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்கி அதிக வெற்றி வாய்ப்பை தரும்.
கடந்த 10 ஆண்டு காலமாக திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணிக்கு கடுமையான ஆதரவு பெருகி வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொடுக்கக் கூடிய வாக்குறுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.
கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறினால் முதலமைச்சர் கல்விக் கடனையும் ரத்து செய்து விடுவார். அந்த அளவுக்கு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க... கொண்ட கொள்கைக்கும், மக்களின் அன்பிற்கு நான் அடிமை- சசிகலா