ETV Bharat / state

கத்தார் சிறையிலிருக்கும் மகனை மீட்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மனு!

ராமநாதபுரம்: கத்தார் சிறையிலிருக்கும் தனது மகனை மீட்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பாதிக்கப்பட்டவரின் தாய் மனு அளித்துள்ளார்.

Mother files a petition at the Collector's Office to rescue her son from Qatar prison

author img

By

Published : Mar 2, 2020, 7:26 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உசிலங்காட்டுவலசை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆறு மாதங்களுக்கு முன்பு ஓட்டுநர் வேலைக்காக காத்தார் சென்றுள்ளார். ஆனால் அங்கு மூன்று மாதங்களாக பணியில் ஈட்டுபட்டு வந்த அவருக்கு ஊதியம் வழங்காமல் வேலையைமட்டும் வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ள ஏஜென்டுகள், வேலை செய்ய விருப்பமில்லை என்று கூறிய செல்வராஜை அடித்து துன்புறுத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அவர்களிடம் தப்பி நாடு திரும்ப முடிவு செய்த செல்வராஜை பிடித்த ஏஜெண்ட்கள், அவர் மீது காவல்துறையில் பொய்யான புகாரையளித்துள்ளனர். ஏஜென்டுகள் அளித்துள்ள புகாரின் பேரில் செல்வராஜை கைது செய்த கத்தார் காவல்துறையினர், அவரை சிறையிலடைத்துள்ளனர்.

மகனை மீட்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மனு

இத்தகவலறிந்த செல்வராஜின், தாய் பஞ்சம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கத்தாரில் சிறையிலிருக்கும் தனது மகன் செல்வராஜை மீட்டுத்தரக்கோரி மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:தி.மலையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.