இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன், சுகன்யா தம்பதி. இருவருக்கு மூன்று வயதில் நிஷான்கா என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் சாய் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் இன்று (அக.16) ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த சுகன்யா இரண்டு குழந்தைகளையும் நாச்சியந்தேல் கிராமத்தில் உள்ள குளத்தில் முழ்கடித்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து திருவாடானை தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளை கொன்ற தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தவறாக நடக்க முயற்சி செய்ததால் மகனை வெட்டி கூறுபோட்டேன் - அதிரவைத்த தாயின் வாக்குமூலம்