ETV Bharat / state

ராமநாதபுரத்தில் ஒரேநாளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

author img

By

Published : Jun 20, 2021, 4:57 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 19) மட்டும் 9,456 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

ஒரேநாளில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்

தமிழ்நாடு முழுவதிலும் காரோனா நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தும் பணி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டது. தற்பொழுது அப்பணி மீண்டும் நடைபெற்று வருகிறது.

9,456 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடக்கத்தில் மக்கள் மத்தியில் அச்சம் இருந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் முகாம்களில் ஊசி செலுத்த மக்கள் படையெடுத்து வருகின்றனர். நேற்று (ஜூன் 19) ஒரே நாளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒன்பதாயிரத்து, 456 பேர் நோய்த்தொற்று தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.

தற்போதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து, 63 ஆயிரத்து, 891 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வரும் காலங்களில் தடுப்பூசி அதிகமாகக் கிடைக்கும் என்பதால் மக்களுக்கு தட்டுப்பாடின்றி தடுப்பூசி கிடைக்கும் என்று சுகாதாரத் துறை பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.