ராமநாதபுரம்: மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட முகாம்களில், இதுவரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 514 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 877 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 389 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, அரசு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரத்தில் இதுவரை 2 லட்சத்து 13 ஆயிரத்து 649 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 3 ஆயிரத்து 230 கோவாக்சின், 9 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசி குப்பிகள் கையிருப்பில் உள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்