ETV Bharat / state

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறி நவீன கோடாங்கி! - Collector Awareness

ராமநாதபுரம் அரண்மனை அருகே கரோனா தொற்றுக் குறித்து, குறி நவீன கோடாங்கி என்கிற நூதன விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

கரோனா விழிப்புணர்வு -  ஆட்சியர் விழிப்புணர்வு

author img

By

Published : Jun 9, 2021, 7:43 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 158 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 15 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது, 2,557 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 255 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (ஜூன் 9) கரோனா தொற்று குறித்து குறி நவீன கோடாங்கி என்கிற நூதன விழிப்புணர்வு ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்றது.

இந்த குறிசொல்லும் கோடாங்கியின் விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட எஸ்பி கார்த்திக் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

கரோனா எப்படிப் போகுமென்று பக்தன் ஒருவன் கேட்பதற்கு மாஸ்க் அணியாமல் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் கரோனா ஒழியாது என்று கோடாங்கி குறி சொல்வது போலவும், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோடாங்கி குறி சொல்லும் காட்சிகள் அனைவரையும் கவர்வதாக அமைந்திருந்தன.

இதையும் படிங்க: ஜூன் 21ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.