ETV Bharat / state

ராமநாதபுரம் ஆட்சியரிடம் கருணாஸ் எம்எல்ஏ மனு - மாவட்ட ஆட்சியரை சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ

ராமநாதபுரம்: திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான கருணாஸ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.

திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் இன்று திடீரென மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தித்தார்

author img

By

Published : Sep 12, 2020, 8:34 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் இன்று (செப்டம்பர் 12) திடீரென ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புதிதாக பதவி ஏற்றுள்ளதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்ததாக கூறினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கருணாஸ் கட்சியிலிருந்து பிரிந்து முக்குலத்தோர் தேவர் புலிப்படை என்ற கட்சியை தொடங்கிய பரமக்குடியைச் சேர்ந்த பாண்டிதுரையின் வீட்டில், கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட சில வாகனங்கள் சேதமடைந்தன.

இது தொடர்பாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆட்சியரை சந்தித்து கருணாஸ் மனு கொடுத்தார். அதில், குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எனது கட்சி மீது பழி கூறப்படுகிறது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.