ETV Bharat / state

மாயமான மாணவர் முகநூலில் தோன்றி மறைந்ததால் பரபரப்பு..! - முகநூல்

ராமநாதபுரத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மாணவர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளதாக தகவல் கிடைத்ததுள்ளது.

Social media Missing student  Missing student  student missing  missing case  ramanathapuram news  ramanathapuram latest news  ramanathapuram missing student found in social media  missing student found in social media  missing student found in social media after four year  நான்கு ஆண்டுகளுக்கு முன் மாயமான மாணவர்  மாயமான மாணவர் முகநூலில் தோன்றி மறைந்ததால் பரபரப்பு  மாயமான மாணவர்  முகநூல்  ராமநாதபுரம் செய்திகள்
மாயமான மாணவர்
author img

By

Published : Aug 14, 2021, 9:59 PM IST

ராமநாதபுரம்: அபிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த விக்னேஷ்வரன் (17), அங்குள்ள பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படித்தபோது திடீரென மாயமானார்.

மாணவரின் தந்தை நடராஜன் அளித்த புகாரின்பேரில் அபிராமம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடிவந்தனர்.

நீதிபதிகள் உத்தரவு

இதனிடையே மாணவி ஒருவரை கேலி செய்ததால், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு அஞ்சி விக்னேஷ்வரன் மாயமானரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

ஆனால் விக்னேஷ்வரன் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காததால், மாணவரின் தந்தை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவரை கண்டுபிடித்து நீதிமன்றம் முன் நிறுத்துமாறு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, தனிப்படை அமைத்து தேடிவந்த காவல் துறையினர், விக்னேஷ்வரன் கிடைக்காதது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்தனர். விக்னேஷ்வரன் மாயமான வழக்கு கடந்த 2019இல் சிபிசிஐடிக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமூக வலைதளங்களில் தொடர்பு

பின்னர் விக்னேஷ்வரன் குறித்த தகவல்களை சேகரித்து, ராமநாதபுரம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் விக்னேஷ்வரன் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சிபிசிஐடி காவல் துறையினர் டெல்லி சென்று விசாரித்தனர். தற்போது 21 வயதை கடந்த விக்னேஸ்வரன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ளதாக தகவல் கிடைத்தது.

இதன்படி, விக்னேஷ்வரன் குறித்த விபரங்களை முகநூல் நிறுவனத்திடம், ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் சிபிசிஐடி காவலர்கள் வாங்கி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் காணாமல் போவதற்கு முன்பு விக்னேஷ்வரன் பயன்படுத்திய சமூக வலைதள தொடர்பு விபரங்கள் அடிப்படையிலும் விசாரித்து வருகின்றனர். பெற்ற மகன் இருக்கிறானா, இல்லையா, எங்கே இருக்கிறான் என்ற தகவல் தெரியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கார் மீது இரண்டு லாரிகள் மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.