வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ளது. கடலோரப்பகுதிகளில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், புயல் இன்று கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தின் மிகமுக்கிய சுற்றுலாத்தலமான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. மேலும், கடலில் இறங்கி குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர். சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாக இருப்பதால் வியாபாரமின்றி இருப்பதாக கோவிலை சுற்றி உள்ள வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.