கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உதத்ரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் நேற்று வீசிய சூறைக்காற்றில் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் மிகுந்த தேசத்திற்குள்ளாகியுள்ளன.
இதையடுத்து படகின் உரிமையாளர்களும், மீனவர்களும் இணைந்து சூறைக்காற்றால் கரைக்கு வந்த படகுகளை மீண்டும் கடல் பகுதியில் விடும் பணியினை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மீனவர் ஒருவர் கூறும்போது, ”இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் முப்பதிற்கும் மேற்பட்ட படகுகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இதனால் மீனவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக படகுகளை சரிசெய்ய தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பினாலும், மீன்பிடித் தடைக்காலம் என்பதினாலும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில், படகுகளும் சேதமடைந்தால் தாங்கள் எவ்வாறு சமாளிப்போம் என்று கேள்வி எழுப்பிய அவர், மத்திய மாநில அரசுகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் பார்க்க:அடித்துவிரட்டும் காவல் துறை, அனுமதிக்காத மீன்வளத் துறை! - மீனவப் பெண்கள் கண்டனத் தீர்மானம்