ராமேஸ்வரம் : பாம்பன் ரயிலின் தூக்குப் பாலத்தில் கடந்த ஜுன் மாதம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெற்ற வருகிறது.
பாம்பன் தெற்கு பாக் ஜலசந்தி பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடற்பகுதிக்கு செல்ல மண்டபத்தைச் சேர்ந்த சிறிய விசைப்படகு ஒன்று இன்று மதியம் (ஆகஸ்ட் 23)ஐந்து மீனவர்களுடன் பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து செல்ல முயன்றது.
பாலத்தின் மீது மோதல்
அப்போது மீன்பிடி விசைப் படகின் மேற்கூரை தூக்குப் பாலத்தின் மீது மோதியது. இதில் விசைப் படகு பலத்த சேதமடைந்தது. தொடர்ந்து விசைப்படகு ஓட்டுநர் சாமர்த்தியமாக படகை இயக்கி பாலத்தின் தூண்கள் மீது மோதாமல் லாவகமாக விசைப்படகை ஓட்டிச் சென்றார்.
சோதனை
இதனையடுத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளதா என ரயில்வே பொறியாளர்கள் சோதனை செய்தனர். ஆனால் பாலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்தது.
விபத்து ஏற்படுத்திய மீன்பிடி விசைப் படகுகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ரயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து படகு எண் மூலம் (TN 11 MM 672) விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க :பள்ளிகளை தயார் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு