ராமநாதபுரம்: திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ஜொனாபர் நிஷா என்பவருக்கு வாட்ஸ் ஆப் செயலியில் இரண்டு எண்களில் இருந்து ஆபாச காணொலிகள், குறுந்தகவல்கள் வந்துள்ளன.
தொடர்ந்து அதேபோல் வீடியோக்களும் குறுந்தகவல்களும் வந்த நிலையில் அச்சமடைந்த அவர், இது குறிதது அம்மாவட்ட குற்றப் பிரிவுக்கு இணையம் வழியாக புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆபாச காணொலி அனுப்பியவர், ராமநாதபுரம் தேவிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த நைனா முகமது என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது