கரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் நேற்றூ (ஜூன்.14) முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் 121 டாஸ்மாக் மதுபான கடைகளும் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன. கடை திறப்பதற்கு முன்பே நீண்ட வரிசையில் குடிமகன்கள் சமூக இடைவெளியோடு காத்திருந்தனர்.
அவர்களுக்கு கிருமிநாசினி கொடுத்து கைகளை தூய்மைப்படுத்திய பின்னர் மதுபானம் விற்பனை தொடங்கியது. 3 வாரங்களுக்கு பிறகு மதுபானம் கிடைத்த மகிழ்ச்சியில் குடிமகன்கள் சரக்குகளை வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க:ராமநாதபுரத்தில் திருமணமான காதல் ஜோடி காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சம்