ராமநாதபுரம் மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த காவலர் கண்ணன். இவர் பரமக்குடி தாலுக்கா காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான மானாமதுரைக்கு இன்று (ஜூன் 16) இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
உயிரிழந்த காவலர்
பலசை என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி கண்ணனின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணி முடித்து விட்டுக் செல்லும் வழியில் காவலர் உயிரிழந்தார் நிகழ்வு சக காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.