ETV Bharat / state

போலி ஆவணம் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு - ராமநாதபுரம் மாவட்ட செய்திகள்

ராமநாதபுரம்: போலி ஆவணம் மூலம் 6.70 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனை நிலத்தை மோசடி செய்த 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.

forgery
நில மோசடி
author img

By

Published : Feb 2, 2021, 7:18 PM IST

ராமநாதபுரம் கிருஷ்ணாநகர் 3ஆவது தெருவை சேர்ந்தவர், தாமரைச்செல்வம். இவரது தாத்தா சிவன் தனக்குச் சொந்தமான சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள 1000 சதுர அடி வீட்டுமனை நிலத்தை பாகப்பிரிவினை மூலம் தனது மகன் முருகானந்தத்துக்கு (தாமரைச்செல்வனின் தந்தை) அளித்துள்ளார். இந்த நிலத்தை முருகானந்தம் தனது நண்பரான பஞ்சவர்ணம் என்பவருக்கு வெளிப்பட்டிணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு எழுதிக்கொடுத்தார்.

2010ஆண்டு முருகானந்தம் உயிரிழந்த பின், அவர் எழுதிக் கொடுத்த நிலத்தை பஞ்சவர்ணம், திருஉத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு அதே ஆண்டு ஏப்ரலில் கிரையமாக கொடுக்க போல போலி ஆவணம் தயாரித்துள்ளார்.

நாகராஜனிடமிருந்து கடந்த 2011ஆம் ஆண்டு கிரையம் பெற்றுள்ளார். அதன் பின்னர் நிலத்தை ராமநாதபுரம் பாம்பூரணியைச் சேர்ந்த காதர்முகைதீன் என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதையறிந்த தாமரைச்செல்வம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் 6.70 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1000 சதுர அடி வீட்டுமனை நிலத்தை பஞ்சவர்ணம், நாகராஜன், காதர்மொய்தீன் ஆகியோர் போலி ஆவணம் மூலம் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வந்தவாசியில் ஆசிரியை, முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.