ETV Bharat / state

கனிமொழியிடம் கதறி அழுத கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்! - மீனவர்கள் கொலை

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழியின் கையைப்பிடித்து கதறி அழுதனர். அவர்களுக்கு கனிமொழி ஆறுதல் கூறினார்.

kanimozhi
kanimozhi
author img

By

Published : Jan 23, 2021, 12:52 PM IST

Updated : Jan 23, 2021, 1:46 PM IST

கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்று இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் செந்தில்குமார், நாகராஜ், மெசியா, சாம்சங் ஆகிய நான்கு பேரின் குடும்பத்தினரை, ராமநாதபுரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாலேயே இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கனிமொழியின் கையைப்பிடித்து அவர்கள் கதறி அழுதனர். இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியை திமுக சார்பில் அவர் அப்போது வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, ”கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும் போது, அப்போது இருந்த மாநில திமுக அரசிடம் யாரும் கேட்கவில்லை. தாரை வார்த்து கொடுக்கும் போது மாநில அரசு எந்த ஒரு கருத்தும் சொல்ல முடியாத நிலையில் இருந்தோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இறந்த மீனவர்களின் குழந்தைகள் கல்விச்செலவு முழுமையும் ஏற்கும்” என்றார்.

கனிமொழியிடம் கதறி அழுத கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர்!

முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இல்லத்திற்கு சென்ற கனிமொழி, கலாமின் 104 வயது சகோதரர் மரைக்காயரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அவருக்கு அப்துல்கலாமின் புத்தகம் ஒன்றையும், திமுக தலைவர் கலைஞர் மற்றும் அப்துல்கலாம் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் அவரது குடும்பத்தினர் பரிசாக வழங்கினர்.

கலாம் குடும்பத்தாரை சந்தித்த கனிமொழி

இதையும் படிங்க: ‘மாணவர்களின் மருத்துவ கனவை தடுத்து நிறுத்திய கிரண்பேடி பதிலளிக்க வேண்டும்’ - நாராயணசாமி!

Last Updated : Jan 23, 2021, 1:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.