ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் பாண்டி. இவர் சென்னை நகர், தனி ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நாகநாதன் பாண்டி இரண்டாம் இடம்பிடித்து அசத்தினார். இதன்மூலம், ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று சாதித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நாகநாதன், "டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கும், தனது கிராமத்திற்கும், தான் சார்ந்த தமிழ்நாடு காவல் துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக, இவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் காவல் துறை சார்பில் போட்டியிட்டு தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'என் தயாரிப்பு எப்போ, எங்கே விற்பனை செய்யணும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்' - எஸ்.ஆர்.பிரபு