ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதிகளில், ஆற்று மணல் டிராக்டர்களில் திருடப்படுவதாக மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரசன்னாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவிலாங்குளம் அருகே காணிக்கூர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
அப்போது டிராக்டரில் மணலுடன் தப்பியோட முயன்ற நபர் ஒருவரைக் கண்ட மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரும் காவல் துறை ஜீப் ஓட்டுநரும் அந்த டிராக்டரை விரட்டிச் சென்றனர். இதில், டிராக்டரில் இருந்த ஆற்று மணல் கொட்டிய நிலையில், டிராக்டர் ஓட்டுநர் வயல்வெளிக்குள் புகுந்து தப்ப முயன்றார்.
இதனையடுத்து டிராக்டர் ஓட்டுநர் முனீஸ்வரனைப் பிடித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கோவிலாங்குளம் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: நடமாடும் ஆக்ஸிஜன் பேருந்து: கரூர் ஆட்சியரிடம் வழங்கிய சிஐஐ