ETV Bharat / state

வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி: புகாரிலோ 35... மோசடியோ 50...!

author img

By

Published : Dec 21, 2019, 9:57 PM IST

ராமநாதபுரம்: கடலாடி அருகே ஐ.ஓ.பி. வங்கி மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளரிடம் விசாரணை மேற்கொண்டபோது வங்கி அலுவலர்கள் முன்னிலையில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

jewelry-valuer-cheated-35lakhs-by-duplicate-jewels-in-iob-ramanathapuram-kadaladi-branchநகை மோசடியில் ஈடுபட்ட வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை முயற்சி
jewelry-valuer-cheated-35lakhs-by-duplicate-jewels-in-iob-ramanathapuram-kadaladi-branch

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் போலியான நகைகளை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து தூத்துக்குடியிலிருந்து வங்கியின் உயர் அலுவலர்கள் குழு நேற்று வந்து வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர்.

விசாரணையும்... எலிமருந்தும்...!

ஆய்வின்போது, வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளில் சில போலி நகைகளாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றிவந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த சண்முகப்பாண்டி என்பவரிடம் ஐ.ஓ.பி. அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது திடீரென அவர், தான் வைத்திருந்த எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை கடலாடி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சையளித்து மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரோ 35...! மோசடியோ 50...!

இந்நிலையில் இன்று வங்கி அலுவலர்கள் கடலாடி காவல் நிலையத்தில், ரூ.35 லட்சம் வரை போலி நகைகளை தர நிர்ணயம் செய்து சண்முகப்பாண்டி மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் அளித்தனர்.

காவல் துறையின் விசாரணையில், ஐ.ஓ.பி. வங்கி உயர் அலுவலர்கள் விசாரணைக்கு வருவதை முன்பே அறிந்த சண்முகப்பாண்டி வங்கிக்கு வரும்போதே எலி மருந்தை எடுத்துவந்ததாகவும் மேலும் மோசடி செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சத்தையும் தாண்டும் எனத் தெரியவந்துள்ளது.

மற்றவர்களுக்குத் தொடர்பு?

இந்த மோசடியில் யார், யார் ஈடுபட்டிருக்கிறார்கள். வங்கியில் பணியாற்றும் மற்ற அலுவலர்களுக்கும் பங்குண்டா என்பது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படியுங்க: ஈச்சனாரியில் 2 டன் கலப்பட தேயிலை தூள் பறிமுதல்!

Intro:இராமநாதபுரம்
டிச.21

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஐ.ஓ.பி வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளர் விசாரணையின் போது அதிகாரிகள் முன்னிலையில் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு.Body:இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பேருந்து நிலையம் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் போலியான நகைகளை வைத்து மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்ததையடுத்து தூத்துக்குடியிலிருந்து வங்கியின் உயர் அதிகாரிகள் குழு நேற்று வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வின் போது வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளில் சில போலி நகைகளாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்த முதுகுளத்தூரைச் சேர்ந்த சண்முக பாண்டி என்பவரிடம் ஐஓபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடிரென சண்முக பாண்டி, தான் வைத்திருந்த எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே சண்முக பாண்டியை கடலாடி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வங்கி அதிகாரிகள் கடலாடி காவல் நிலையத்தில் ரூ. 35 லட்சம் வரையிலுமான போலி நகைகளை தர நிர்ணயம் செய்து மோசடியில் ஈடுபட்ட சண்முகபாண்டி மீது புகார் அளித்தனர். காவல்துறையின் விசாரணையில் ஐஓபியின் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு வருவதை முன்பே அறிந்த சண்முகபாண்டி வங்கிக்கு வரும்போதே எலி மருந்தை எடுத்துவந்தது தெரியவந்துள்ளது. மேலும் மோசடி செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 50 லட்சத்தையும் தாண்டும் எனத் தெரிகிறது. இந்த மோசடியில் யார், யார் ஈடுபட்டிருக்கிறார்கள். வங்கியில் பணியாற்றும் மற்ற அதிகாரிகளுக்கும் பங்குண்டா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.