17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்.11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சேலம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் 2011ஆம் ஆண்டில் நவாஸ் கனி இணைந்து, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் அக்கட்சியின் மாநில கவுரவ செயலாளராக உள்ளார்.