ராமநாதபுரத்தில் இதுவரை கரோனா பரிசோதனை 583 பேருக்கு எடுக்கப்பட்டுள்ளது. அதில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவமனை என பல்வேறு பகுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (22/5/20) மட்டும் ஏழு பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் கீழக்கரையில் மட்டும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் பத்து வயது சிறுவன், சாயல்குடியில் 23 வயது பெண் ஆகியோருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ராமநாதபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46ஆக உயர்ந்ததுள்ளது. இது கீழக்கரையில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.