ராமநாதபுரம்: ராமநாதபுரம் திருவாடானை நெய்வயல் கிராமத்தில் திமுக சார்பில் நடந்த மக்கள் சபைக் கூட்டத்தில் அதிமுகவை நிராகரிப்போம், கையெழுத்து இயக்கம் என்ற நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கலந்துகொண்டார். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வீடு கட்டித் தரப்படும் என கூட்டத்தில் அவர் பேசினார்.
மேலும், பொதுமக்கள் கூறிய குறைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார். இக்கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிப்போம் என முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களில் சிலர், மக்களவைத் தேர்தலுக்குப் பின் தற்போதுதான் எம்பி இங்கு வந்துள்ளார் என முனுமுனுத்தனர். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இப்பகுதியில் அவர் கலந்துகொள்ளும் முதல்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊழலுக்காக முதலமைச்சரே ஜெயிலுக்குப் போனது அதிமுக ஆட்சியில்தான் - துரைமுருகன்